ஆதார் எண் இல்லை எனில் மானியம் கட்!!!

அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்துக்கு, ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எனவே, காஸ் சிலிண்டருக்கு மானியம் பெறும் வாடிக்கையாளர்கள், 30க்குள், ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்' என, காஸ் ஏஜன்சிகள் அறிவித்துள்ளன.



மத்திய அரசு உத்தரவுப்படி, காஸ் சிலிண்டருக்கான மானியம், வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், காஸ் புத்தக நகல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவை, காஸ் ஏஜன்சியிடம் ஒப்படைக்கப்

பட்டன. அப்போது, ஆதார் பதிவு முழுமையாக நடக்காமல் இருந்ததால், வங்கி கணக்கு எண் மட்டும் பதிவு செய்யலாம் என, சலுகை வழங்கப்பட்டது.



மானியம் வழங்கப்படும்

அத்யாவசிய பொருட்கள் வினியோகத்துக்கு, ஆதார் எண் தேவை என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, காஸ் மானியம் பெறும் வாடிக்கையாளர்கள், உடனடியாக ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, எண்ணெய் நிறுவனங்களும், காஸ் ஏஜன்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.



வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு, காஸ் மானியம் பெறும் குடும்பத்தார், காஸ் இணைப்புதாரரின் ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் பதியும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதால், வரும், 30க்குள், இவ்விவரத்தை காஸ் ஏஜன்சியிடமும், வங்கியிலும் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.



காஸ் ஏஜன்சியினர் கூறுகையில், "எண்ணெய் நிறுவனங்களின் உத்தரவுப்படி, ஆதார் எண் சமர்ப்பித்த வாடிக்கையாளருக்கு மட்டுமே, காஸ் சிலிண்டருக்கான மானியம் கிடைக்கும். எனவே, அந்தந்த ஏஜன்சிகளில், 30க்குள், ஆதார் அட்டை நகல் அல்லது அட்டை எண்ணை வழங்க வேண்டும்.



"காஸ் மானியம் பெறும் கணக்கு உள்ள வங்கியி<லும், ஆதார் எண்ணை உடனடியாக பதிவு செய்ய வேண்டும். இம்மாத இறுதிக்குள், ஆதார் எண் பதிவு செய்யாவிட்டால், காஸ் மானியம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...