SSTA வின் 09/06/2016 சந்திப்பின் வெற்றிகள், ஈராசிரியர் பள்ளிகளில் மாறுதல் பெற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள்,மகப்பேறு விடுப்பிற்கு பதிலி ஆசிரியர்,BE.d கற்பித்தல் பயிற்சிக்கு முழு ஊதியம் பரிசீலனை, பின்னேற்பிற்கு தொடர் நடவடிக்கை,மலைச்சுழற்சி பாதிப்புகளை களைதல் ....!!!

  SSTA வின் மாநில நிர்வாகிகள் நேற்று(09/06/2016) மரியாதை நிமிர்த்தமாக மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து புதிதாக பொறுப்பேற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    அடுத்து தொடக்கக் கல்வித்துறை இயக்குனரை சந்தித்து புதிய கல்வியாண்டிற்கான வாழ்த்துக்களை கூறியதோடு SSTA வின்  பல்வேறு கோரிக்கைகள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டது.

*🌹🌹SSTA வின் 09/06/2016 சந்திப்பின் வெற்றிகள்🌹🌹*

*🔯✳ SSTA வின் தொடர் கோரிக்கையான பின்னேற்பு அரசு சிறு விளக்கங்கள் கேட்டு இரண்டாவது முறையாக திருப்பப்பட்டுள்ளது. நமது இன்றைய கோரிக்கையில் வலியுறுத்தலைத் தொடர்ந்து மீண்டும் அரசின் அனுமதிக்கு உடனே அனுப்பப்படுகிறது.


*✳🔯கடந்த கலந்தாய்வில் ஈராசிரியர் பள்ளிகளில் பணியிட மாறுதல் பெற்றவர்களை Surplus ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பிவிட்டு அவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மிக விரைவில் நிறைவேறும் .



*🔯✳SSTA வின் மற்றொரு தொடர் கோரிக்கையான மலைச் சுழற்சியால் பாதிக்கப்படுகின்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை பாதிக்காதவாறு  நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்த்ப்பட்டது.*


*✳🔯மகப்பேறு விடுப்பு எடுக்கும் பட்சத்தில் மாணவர் நலன் பாதிக்காதவாறு அந்தந்த ஒன்றியத்திலுள்ள Surplus ஆசிரியர்களைப் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்திரவாதம் அளிக்கப்பட்டது.*


*✳🔯ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு இன்னும் நிர்ணயம் செய்யவில்லை.விரைவில் அதற்கான பணி முடிந்து அரசாணை அனுமதி பெற்று விரைவில் (இம்மாதம் இறுதியில்) சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தவுடன் ,வெளிவர வாய்ப்புகள் உள்ளது என தெரிகிறது. தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்.நமது SSTA கூறியது இதுவரை பொய்த்ததில்லை.*


*🔯✳SSTA வின் வெற்றிகளின் ஒன்றான ஆன்லைன் கலந்தாய்வு முறையிலேயே இந்த முறையும் சிறப்பாக நடத்தி முடிக்கப்படும் என தெரிகிறது.*


*🔯✳B.Ed கற்பித்தல் பயிற்சிற்கு முழு ஊதியம் என்பதற்கு இதுவரை எந்த அரசாணையோ அல்லது அரசு கடிதமோ இல்லை. நமது SSTA இயக்கம் சார்பில் இக்கோரிக்கையை மிக அழுத்தமாக வைக்கப்பட்டுள்ளது.*

ஆசிரிய தோழமைகளுக்கு SSTAவின் அன்பான வேண்டுகோள் :
  இனிவரும் காலங்களில் RTI கடிதங்களில் தாங்கள் கேட்கப்படும் தகவல்களுக்கு உண்டா? இல்லையா? என்பதை விட அரசாணை அல்லது அரசு ஆவணங்களை பெறும் வகையில் எழுதுதல் சிறந்தது.
B.Ed கற்பித்தல் பயிற்சிக்கு முழு ஊதியம் என்பதற்கு பள்ளிக்கல்வித்துறை அரசாணைகளை SSTA பரிசீலித்து வருகிறது. இருப்பினும் தாங்களிடம்  வேறு ஆவணங்கள் இருந்தால்  SSTAவிற்கு உடனே தெரியப்படுத்தலாம்.

*✳🔯  இந்த கலந்தாய்வில் Spouse முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என மீண்டும் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கு வாய்ப்புகள் குறைவு போல் தெரிகிறது. அராணை வந்தால் தான் முழு விபரம் தெரியும்.*
 என்றும் ஆசிரியர்களின் நலன்கருதி செயல்படும்...
 *உங்கள்🌹🌹SSTA🌹🌹*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...