11.07.2016 * திங்கள் இன்றைய முக்கிய செய்திகள்...!

*🌹🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*

*🌟11.07.2016 * திங்கள் 🌟*

*🙏🏻 தலைப்பு செய்திகள் 🙏🏻*

*⭕மாநில செய்திகள்⭕*

🍇தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைவு.

🍇கூடங்குளம் 2வது அணு உலையில் அணுப்பிளவு சோதனையுடன் மின் உற்பத்தி தொடங்கியது


🍇கர்நாடகாவில் கனமழை எதிரொலி... மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்வு

🍇குற்றாலத்தில் விடுமுறை தினமான சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

🍇மண்டபத்தில் சூறாவளி காற்றில் படகு சிக்கி கடலில் மூழ்கியது. மீனவர்கள் அதிஷ்டவடமாக உயிர் தப்பினர்

🍇ஸ்ரீநடராஜர் கோயில் “ஆனித்திருமஞ்சன தரிசனம்”: பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

🍇பான் மசாலா குடோன்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக அதிரடி சோதனை

🍇சுவாதி கொலை வழக்கு தொடர்பாக நாளை நடத்த உள்ள அடையாள அணிவகுப்பு சட்ட விரோதமானது என ராம்குமார் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

*⭕தேசிய செய்திகள்⭕*

☔7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கை இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

☔ஏழுமலையான் தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய மொபைல் ஆப்

☔நிதியாண்டு மாற்றத்தை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு “அசோசெம்’ வலியுறுத்தல்

☔காஷ்மீரில் பதற்றம் நீடித்து வருவதால் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்

☔புதிய பயங்கரவாதிகள் உருவெடுப்பர்: ஒமர் அப்துல்லா எச்சரிக்கை

☔காஷ்மீரில் தொடர் பதற்றம்: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

☔நாய்கறி விற்பனைக்கு தடை – நாகலாந்து அரசு முடிவு

*🌹🌹More education news @ www.sstaweb.com🌹🌹*

*⭕உலகச் செய்திகள்⭕*

🌏இந்தியா, தான்சானியா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து: ரூ.616 கோடி கடன் வழங்க இந்தியா ஒப்புதல்

🌏சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் பீஸ் டி.வி., ஒளிப்பரப்பிற்கு வங்கதேச அரசு இன்று தடை விதித்தது

🌏ஏவுகணைப் பரிசோதனைகளை ஈரான் கைவிட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் வலியுறுத்தியுள்ளார்.

🌏அமெரிக்காவில் கண்டன ஊர்வலத்தின்போது 5 போலீஸாரை சுட்டுக் கொன்றவர், ராணுவத்தில் பணியாற்றியவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

🌏நீர்மூழ்கியிலிருந்து ஏவுகணை: வட கொரியா மீண்டும் பரிசோதனை

🌏ஹெச்-1பி விசாக்களுக்கு தடை கோரும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்

🌏ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் ராணுவத்தினருக்கும் முன்னாள் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே  நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

🌏இந்தியாவின் சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்குடன் வங்கதேச மதவாதிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து ஆராய்ந்து வருவதாக அந்த நாட்டு அரசு தெரிவித்தது.

🌏மெக்சிகோவின் வடகிழக்குப்பகுதியில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

*⭕வர்த்தக செய்திகள் ⭕*

💰ஆன்லைனில் தங்கப்பத்திர வெளியீட்டுக்கு ஏலம்: தேசிய பங்குச் சந்தை அறிமுகம்

💰பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் உள்ள இந்தியர்கள் மீது விசாரணை நடத்தவும், அதற்கான ஆதாரங்கள் கேட்டும் 10க்கும் மேற்பட்ட நாடுகளை வருமான வரித்துறை அணுகியுள்ளது.

💰கடந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசு நடவடிக்கையால் கருப்புப்பண அளவு குறைகிறது:அருண் ஜெட்லி பேச்சு

💰தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
22 காரட் 1கி = ₹2957
24 காரட் 10கி = ₹31625

💰வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ ₹51100
பார் வெள்ளி 1 கிலோ
=₹47720

💰மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 74.59 புள்ளிகள் சரிந்து 27,126.90 புள்ளிகளாக உள்ளது.

💰தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 14.70 புள்ளிகள் குறைந்து 8,323.20 புள்ளிகளாக உள்ளது.

*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏀மகளிர் இரட்டையரில் வில்லியம்ஸ் சகோதரிகள் 6வது முறையாக சாம்பியன்

🏀பிரிட்டிஷ் பார்முலா-1: ஹாமில்டன் சாதனை வெற்றி

🏀பைனலில் ரயோனிச்சை வீழ்த்தினார்: விம்பிள்டன் சாம்பியன் மர்ரே

🏀யுஎஸ் ஓபன் பேட்மின்டன்: அரை இறுதியில் ஜெயராம் தோல்வி

🏀பிரான்ஸை வீழ்த்தியது போர்ச்சுக்கல் : யூரோ கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி சாதனை

*🌹🌹More education. news @ www.sstaweb.com*

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...