பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி ஆகஸ்ட் -11 ல் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



 புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநில நிர்வாகத் தீர்ப்பாயம் அமைத்தல், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்துதல், 8-வது ஊதிய மாற்றத்திற்கான குழு அமைத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு இ-மெயில் அனுப்பவேண்டும். அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கவேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களுக்கு மேல் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும்.

தொகுப்பூதியம் - தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது, காலிப்பணியிடங்களை நிரப்புவது, வருமானவரி உச்சவரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடும்போது, தமிழகத்தில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...