தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை வரும் 20-ம் தேதி

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தெ. விஞ்ஞானம் தெரிவித்திருப்பது:


தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையின் வழியாக தேசிய ஆசிரியர் கல்விக் குழு (என்.சி.டி.இ.) அனுமதியுடன் நடத்தப்படும் இளங்கல்வியியல் (பி.எட்.), கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.) இரண்டாண்டுப் பட்டப் படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை ஜூலை 20-ம் தேதி காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் நடைபெறவுள்ளது. தகுதியுடையவர்கள் தங்களது அனைத்து மூலச் சான்றிதழ்கள் மற்றும் முதல் தவணைக் கட்டணத் தொகை ரூ. 26,500 ரொக்கத்துடன் நேரில்வரலாம்.

கல்வித் தகுதி விவரங்களை www.tamiluniversity.ac.in என்ற இணையதள முகவரியிலிருந்து பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04362-226720 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...