வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.20 ஆயிரம் கோடி பரிவர்த்தனை பாதிப்பு

நாடு முழுவதும், நேற்று நடைபெற்ற வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, பொதுத்துறை வங்கிகளில், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன.

பாரத ஸ்டேட் வங்கியுடன், திருவாங்கூர், ஐதராபாத், ஜெய்ப்பூர், மைசூர் உள்ளிட்ட, அதன் ஐந்து துணை வங்கிகளை
இணைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதை கண்டித்து, 'அனைத்து பொதுத்துறை வங்கிகள் பங்கேற்கும் வேலை நிறுத்தப் போராட்டம், ஜூலை, 29ல் நடைபெறும்' என, வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அறிவித்தது.

போராட்டம்:

அந்த கூட்டமைப்பின் கீழ், நாட்டில் உள்ள ஒன்பது பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்கள் இயங்குகின்றன. பாரத ஸ்டேட் வங்கி விவகாரம் மட்டுமின்றி, ஐ.டி.பி.ஐ., வங்கியை தனியார் மயமாக்கும் முடிவு; 5.39
லட்சம் கோடி வாராக்கடன்; தனியார் தொழில் நிறுவனங்களுக்கு வங்கி துவங்க உரிமம் அளிப்பது போன்றவற்றை கண்டித்தும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று நாடு முழுவதிலும் உள்ள, 40 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டனர். தமிழகத்திலும், பொதுத்துறை வங்கிகள் முழுமையாக இயங்கவில்லை.
பல இடங்களில் தனியார் வங்கிகளும் இயங்கவில்லை. எனினும், வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காக, ஏ.டி.எம்., மையங்கள் இயங்கின.

இந்த வேலை நிறுத்தத்தால், பொதுத்துறை வங்கிகளில் பண பரிவர்த்தனை முழுமையாகவும், பல தனியார் வங்கிகளில் பெருமளவிலும் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:

வேலை நிறுத்தத்தில், தமிழகத்தில் உள்ள, 5,600 கிளைகள் உட்பட, நாடு முழுவதும், 80 ஆயிரம் கிளைகளில் பணிபுரியும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். பொதுத்துறைவங்கிகள் மட்டுமின்றி, பெடரல் வங்கி, கத்தோலிக்க சிரியன் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, கோட்டக் மஹிந்திரா உள்ளிட்ட பல தனியார் வங்கிகளும் பங்கேற்றன. அதனால், வங்கிகளில், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு பண
பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன.

காசோலைகள் தேக்கம்: இதுதவிர, தென் மாநில வங்கிகளின், 8 லட்சம்காசோலைகள் தேங்கின. அவற்றின் மதிப்பு, 6 ஆயிரம் கோடி ரூபாய். இவ்வாறாக, நாடு முழுவதும், 26 லட்சம் காசோலைகள் தேங்கியதால், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முழு வெற்றி பெற்று உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்று வங்கிகள் இயங்கும் : மாதத்தின், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை. அதனால், வேலை நிறுத்தம் காரணமாக, நேற்று செயல்படாத பொதுத்துறை வங்கிகள், ஐந்தாவது சனிக்கிழமையான இன்று, வழக்கம் போல இயங்கும். -

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...