குறைந்தபட்ச சம்பளம் மற்றும் 2.57 பிட்மென்ட் பார்முலா மாற்றம் உடனடியாக வரவில்லை எனில் திட்டமிட்டப்படி ஜூலை 11 ல் போராட்டம்...!

நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி, ஜூலை 11இல் வேலை நிறுத்தம் நடந்தே தீரும் என்கிறார் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்இயு) பொதுச் செயலாளர் ஏ.ஜானகிராமன். அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் தேசிய போராட்டக்குழு ஜூலை 11ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தது. இதற்காக அனைத்து ரயில்வே, பாதுகாப்பு
உள்ளிட்ட அனைத்து மத்திய அரசுத் துறைகளிலும் கடந்த மாதம் 9ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்ட நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இதனிடையே, ஜுன் 30ஆம் தேதி புதுதில்லியில் தேசிய போராட்டக் குழு (நேஷனல் ஜாயின்ட் கவுன்சில் ஆப் ஆக்ஷன்) தலைவர்களை மத்திய அரசு அழைத்துப் பேசியது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இணையமைச்சர் மனோஜ் சின்ஹா ஆகியோர் கோரிக்கைகள் குறித்துப் பேசினர். இந்தக் கூட்டத்தில் அகில இந்திய ரயில்வே ஊழியர் சம்மேளனத்தின் (ஏ.ஐ.ஆர்.எப்) பொதுச்செயலாளர் சிவகோபல் மிரா, என்எப்ஐஆர் பொதுச்செயலாளர் எம்.ராகவையா, மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளன பொதுச்செயலாளர் கே.கே.என்.குட்டி, பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனத் தலைவர் ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதில் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் 2.57 பிட்மென்ட் பார்முலா மாற்றுவது குறித்து கமிட்டி அமைக்க அமைச்சர்கள் குழு ஒப்புக்கொண்டது. இதுகுறித்து ஜூலை 6, காலை 11 மணிக்கு தில்லியில் உள்ள ஜே.சி.எம். அலுவலகத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுமென சிவகோபால் மிரா மத்திய அரசுக்கு ஜூலை 1 (வெள்ளி) அன்று கடிதம் அனுப்பியுள்ளார். இதில், வேலைநிறுத்தம் தள்ளிவைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அரசின் அறிவிப்பைப் பொருத்து ஜூலை 6ஆம் தேதிதான் உரிய முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11 வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். கமிட்டி அமைக்கப்படுவதால் குறைந்தபட்ச சம்பள உயர்வு, பிட்மென்ட் பார்முலா மாற்றம் ஆகியவற்றில் பெரிய முன்னேற்றம் ஏற்படாது. மத்திய அமைச்சரவை குழுவுடன் நேரடி பேச்சுவார்த்தையின்மூலமாக இவை தீர்க்கப்பட வேண்டும்.

29.6.2016 பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை முறைப்படுத்த, அனாமலிகளை தீர்க்க இரண்டு கமிட்டிகள் அமைக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டிருப்பது எதிர்க்கப்பட வேண்டிய அம்சமாகும். அதே அமைச்சரவைக் கூட்டத்தில் அலவன்சுகள் மற்றும் அட்வான்சுகள் குறித்து கமிட்டி அமைக்கப்பட்டு அதன் சிபாரிசின் அடிப்படையில் மாற்றப்படும் என்பதும் எதிர்க்கப்பட வேண்டியதாகும்.

பென்சனர்களுக்கு 7வது ஊதியக் குழு கொடுத்த கடைசிப் பதவியின் சர்வீஸ் அடிப்படையில் பென்சன் நிர்ணயம் என்ற முதல் விருப்பத்தை மத்திய அமைச்சரவை மறுத்து அதற்கும் கமிட்டி போட்டுள்ளதும் எதிர்க்கப்பட வேண்டியதாகும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக 36 அம்ச கோரிக்கைகளில் உள்ள ரயில்வேயில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு ரத்து செய்வது, பிபிபி திட்டங்கள் ரத்து செய்வது, காலியிடங்கள் நிரப்புவது உள்ளிட்ட அனைத்துக்கும் அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை.

இந்த நிலையில், வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக தன்னிச்சையாக எஸ்ஆர்எம்யு தலைமை அறிவித்ததை டிஆர்இயு ஏற்கவில்லை. எனவே, வேலைநிறுத்தத்தில் முழுத் தயாரிப்புடன் இறங்குவதற்கு ஒட்டுமொத்த ரயில்வே தொழிலாளர்களுக்கும் டிஆர்இயு மத்திய சங்கம் அறைகூவல் விடுக்கிறது. எங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஜூலை 11இல் ரயில்கள் ஓடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜானகிராமன் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...