3 ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை இல்லை கேள்விக்குறியாகும் மாணவர்களின் கல்வி

சிவகங்கை மாவட்டத்தில் உண்டு, உறைவிடப்பள்ளிகளில் படித்து அரசு தனித்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை வழங்காததால் அவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்
துறையில் மட்டும் ஆயிரத்து 149அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவைகளில் உண்டு, உறைவிடப்பள்ளிகளில் 5ம் படிக்கும் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு தோறும் அரசு சார்பில் தனி தேர்வுகள் நடத்தப்படும். திறனறிதல் தேர்வு வகையில் இருக்கும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆறாம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆதிதிராவிட நலத்துறை சார்பில் வழங்கப்படும்.




இவர்கள் தமிழகத்தில் தனியார் பள்ளி உள்ளிட்ட எந்தப்பள்ளியில் வேண்டுமானாலும் படிக்கலாம். மாணவர்களின் கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கும். இவை ஆண்டுக்கு சுமார் ரூ.25ஆயிரம் வரை வரும். வகுப்பு மற்றும் பள்ளிக்கு பள்ளி கட்டணம் மாறுபடும். ஒரு யூனியனுக்கு ஒரு மாணவர் என்ற வகையில் ஆண்டுதோறும் சிவகங்கை மாவட்டத்தில் 12மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும் எனக்கருதி மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் விடுதிகளில் தங்கி ஆறாம் வகுப்பு முதல் படித்து வருகின்றனர். தற்போது 8ம் வகுப்பை முடித்து ஒன்பதாம் வகுப்பிற்கு சென்றுள்ள மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் மூன்று ஆண்டுகளாக பணம் கட்டாமல் படிப்பது குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் விடுதி நிர்வாகம் நெருக்கடி கொடுப்பதால் மாணவர்களின் கல்வி பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்பதால்தான் வேறு மாவட்டங்களில் விடுதியில் தங்கி படிக்க வைத்தோம். மூன்று ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படாததால் பள்ளி நிர்வாகம் கடும் நெருக்கடி கொடுக்கிறது. பணம் கொண்டு வந்து கட்டுங்கள், எங்களுக்கு பிரச்னையாக உள்ளது என பிள்ளைகள் சொல்லும்போது ஏன் இவ்வாறு படிக்க வைத்தோம் என நினைக்க தோன்றுகிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உதவித்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...