அரவாணிகள் என இழிவுப்படுத்தப்பட்டவர்களை அழகு தமிழில் திருநங்கையர் என கவுரவித்தது தமிழகம்தான். கடந்த திமுக ஆட்சியில் பல சலுகைகளை அறிவித்தது திமுக என்றாலும்கூட திருநங்கையர் தங்களின் கல்வி உரிமைக்காகவும், வாழ்வுரிமைக்காகவும்
ஒவ்வொன்றையும் நீதிமன்றத்தினூடே போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. இப்போது அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் பங்கேற்க அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர் திருநங்கையர். திருநங்கையருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் மற்றவர்கள் போல் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசு ஆறு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநங்கையர் சொப்னா, கிரேஷ் பானு, எம்.செல்வி மனோஜ் பிரேம்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள். மேலும், பொது சேவை ஆணையக் குழு தேர்வு நடத்தும் தேர்வில் பங்கேற்க இவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ‘அனைத்துவிதமான போட்டித் தேர்வுகளிலும், பெண் என்ற பிரிவின் கீழோ அல்லது மூன்றாம் பாலினம் என்ற பிரிவின் கீழோ அல்லது தனியாக ஒரு பிரிவை உருவாக்கியோ திருநங்கையர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். கல்வி வேலைவாய்ப்பில் மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திருநங்கையருக்குச் செய்து தந்தால், திருநங்கையர் தவறான தொழில் செய்வதற்குச் செல்ல மாட்டார்கள்’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மனுதாரரின் கோரிக்கைகள் பற்றி தமிழக சமூக நலத்துறை, மற்ற துறைகளுடன் இணைந்து பரீசிலித்து இன்னும் ஆறு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.