ஆசிரியர் இடமாற்றத்தை தொடர்ந்து 5 மாணவர்களுக்கு டி.சி.,!

வந்தவாசி அருகே, அரசு பள்ளியில் மாணவர்களிடையே மோதல் சம்பவத்தால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட, பத்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஐந்து மாணவர்களுக்கு டி.சி., வழங்கப்பட்டுள்ளது.


வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், இரு பிரிவு மாணவர்கள் இடையே, கடந்த, 1 ம் தேதியில் இருந்து அடுத்தடுத்து மோதல் ஏற்பட்டது. செய்யாறு சப்-கலெக்டர் பிரபுசங்கர், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமார், ஏ.டி.எஸ்.பி., ரங்கராஜன், வந்தவாசி தாசில்தார் முருகன் ஆகியோர், இரு பிரிவு மாணவர்கள், பெற்றோர்கள், கிராம பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முதல் கட்டமாக ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர் நந்தகுமார் உட்பட, பத்து ஆசிரியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், பிரச்னைக்குரிய, ஐந்து மாணவர்களுக்கு டி.சி., (மாற்று சான்றிதழ்) கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமார் உத்தரவின் படி, நான்கு பிளஸ் 2 மாணவர்கள், ஒரு பிளஸ் 1 மாணவருக்கு டி.சி., வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...