உதவித்தொடக்கக்கல்வி அலுவரின் தாமததால் பணப்பலன் இன்றி தவிக்கும் ஆசிரியர்கள்...!

சங்ககிரி ஒன்றியத்தில், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை உத்தரவு வழங்காததால், உரிய நேரத்தில், பணப்பலன் கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர்.
பத்தாண்டுகள், தொடர்ச்சியாக பணியாற்றிய இடைநிலை
ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை அந்தஸ்து, அரசால் வழங்கப்படுகிறது. அதன்படி, சங்ககிரி ஒன்றியத்தில், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றிய, 33 இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஜூன், 1ம் தேதி தேர்வு நிலைக்கான உத்தரவு வழங்கி இருக்க வேண்டும். இதுகுறித்து, சங்ககிரி இடைநிலை ஆசிரியர்கள் கூறியதாவது: உதவி மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் பற்றாக்குறையை காரணம்காட்டி இழுத்தடிப்பு செய்கின்றனர். மேலும், தயாரான உத்தரவு கோப்புகளில், கையெழுத்து இடாமல் காலம் தாழ்த்துகின்றனர்.

அதனால், தங்களுக்கு கிடைக்கவேண்டிய பணப்பலன்கள், உரிய காலத்தில் கிடைக்காமல் அவதிக்குள்ளாகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...