தமிழக அரசு ஊழியர்கள் பணியின்போது லஞ்சம் வாங்கினால், தற்போதைய சட்டப்படி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேரடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க முடியும். அத்துடன் துறை ரீதியான விசாரணை நடத்தி அவர்களை பணியில் இருந்து நீக்கவும் முடியும். இந்த நிலையில்,
தமிழக அரசு கடந்த ஆண்டு ஒரு அவசர உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, லஞ்ச புகாரில் சிக்கும் அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கும்முன்னர், அரசிடம் கருத்து கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு சமூக ஆர்வலர்களுக்கும், ஊழலை எதிர்ப்பவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
அவர் மனுவில், “தமிழக அரசின் இந்தப் புதிய உத்தரவு, லஞ்சத்தில் திளைக்கும் ஊழியர்களுக்கு வசதியாகப்போய்விடும். லஞ்சத்தை கட்டுப்படுத்தும் முயற்சிக்குத் தடையை ஏற்படுத்தும். எனவே, அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்யவேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், லஞ்சப்புகாரில் சிக்கும் அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கும் முன்னர், அரசிடம் விளக்கம் பெற வேண்டும் என்ற அவசர சட்டத்தை ரத்து செய்து, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.