இன்றைய சூழலில் படிப்பு சம்பந்தமாக மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் நிறைய. அவற்றில் முக்கியமானது, ‘ஏன் சரியாகப் படிக்கவில்லை? ஏன் மக்கு மாதிரி வகுப்பில் உட்கார்ந்திருக்கிறாய்?’ என்றெல்லாம் அவர்களைக்
கேட்கும்போது உள்ளுக்குள் கருகிப் போகிறார்கள். இவையெல்லாம் அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது என்கிற கருத்து நிலவுகிறது.
இதுகுறித்து 36 வருடங்களாக ஆசிரியப் பணியில் உள்ள ராஜம்மாள், ‘இன்றைய குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று, ஆங்கிலம். எனக்கு, கல்லூரியில் சேரும்போதுகூட தொடர்ந்து இரண்டு வார்த்தைகளை ஆங்கிலத்தில் கோர்த்து பேசத் தெரியாது. ஆனால், அதே நான்தான் இன்று ஆல் இந்தியா ரேடியோவுக்கு ஆங்கிலத்தில் நிகழ்ச்சி தயார் செய்து கொடுக்கிறேன். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறேன்.
பெற்றோர்கள் நினைத்தால் குழந்தைகளை ஆங்கிலத்தில் பேசவைக்க முடியும். அதற்காக அவர்களுக்கு ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம். இல்லை. முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்... உங்கள் குழந்தைகளுக்கு பல தமிழ் வார்த்தைகளுக்கு நிகரான ஆங்கில வார்த்தைகள் தெரியும். ஆனால் எப்படி கோர்த்து பேசுவது என்பதுதான் தெரியாது.
‘இன்னிக்கு மார்னிங் என்னோட ப்ரேக்பாஸ்ட் தோசை’ என்று நாம் சாதாரணமாகப் பேசுவதிலேயே இரண்டு ஆங்கிலச் சொற்கள் வந்துவிடுகின்றன. இதனைக் கோர்வையாக பேச வேண்டுமென்றால், பெற்றோர் முதலில் பேச வேண்டும். ‘டேக் திஸ்’, ‘டூ இஸ்’, ‘டோன்ட் வொரி’, ‘டேக் இட் ஈஸி’, ‘கெட் அப்’ என சிறு சிறு வார்த்தைகளாகப் பேசுங்கள். அவர்களையும் அதேபோல் பேசச் சொல்லி உற்சாகப்படுத்துங்கள். ஆங்கிலப் படங்கள், கார்ட்டூன், செய்திகள் போன்றவற்றை தினமும் அரைமணி நேரம் பார்க்கச் சொல்லுங்கள். புரியவில்லை என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். நம்மை அறியாமல் பல வார்த்தைகளை மனத்தில் பதிந்துவிடும்.
ஒன்றரை பக்கக் கட்டுரை ஆங்கிலத்தில் ஒப்பிப்பதுதான் ஆங்கிலம் படித்ததின் அறிகுறி என்பதல்ல. அது அவர்களின் பள்ளிப்பாடம். மனப்பாடம் செய்திருப்பார்கள். அதனால் வருங்காலத்தில் பயனில்லை.
மொழி என்பது புரிந்து கொள்ளவும், புரிய வைக்கவும் தேவைப்படுவது. அதனால், தவறாகப் பேசினாலும் அதைப் பெரிதுபடுத்தாமல், சொல்ல வந்ததைச் சொல்லும் முயற்சி இருக்கிறதா என்பதை மட்டும் பாருங்கள். ஆறு மாத காலம்தான். அவர்களின் ஆங்கில மொழி முன்னேற்றத்தைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தாழ்வு மனப்பான்மை அதுவாகப் போய்விடும்’