மின் இதழ்கள், மின் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்வதில் மதுரை காமராஜ் பல்கலை மீனாட்சிசுந்தரம் நுாலகம் தமிழகத்தில் 2வது இடம் பெற்றுள்ளது.
தேசிய அளவில் பல்கலை நுாலகங்களின் தரவரிசை பட்டியலை
யு.ஜி.சி.,யின் இன்பிலிப்நெட் மையம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது. இதில் நுாலக உள்கட்டமைப்பு, இணையதள வசதி, கணினி எண்ணிக்கை, மின் இதழ், மின் புத்தகங்களுக்கான பிரத்யேக மென்பொருள் மற்றும் பயன்பாடு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
இதன்படி 2015ல் வெளியிடப்பட்ட பட்டியலில் 3 லட்சத்து 69,718 மின் இதழ்கள், புத்தகங்கள் பதிவிறக்கம் (டவுண்லோடு) செய்யப்பட்டதற்காக மதுரை காமராஜ் பல்கலை நுாலகம் தேசிய அளவில் 13 வது இடமும், மாநிலத்தில் 2ம் இடமும் பெற்றது.
பதிவாளர் (பொறுப்பு) முத்துமாணிக்கம், நுாலகர் சுரேஷ் கூறியதாவது:
மாணவர், ஆராய்ச்சியாளர், ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் நுாலகத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இதழ்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமான மின் புத்தகங்கள் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்தள நடைமேடை உட்பட பல்வேறு நவீன வசதிகளும் உள்ளன. கடந்தாண்டும் 2ம் இடம் கிடைத்தது, என்றனர்.