சி.பி.ஐ. (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலச்செயலாளர்
ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை வரவேற்கத்தக்கது. ”தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் அணுகுமுறையை மாற்றி அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கக்கூடிய கொள்கையை, மாநில அரசு
நடைமுறைப்படுத்திட வேண்டும்” என்ற கோரிக்கையை இக் கட்டுரையில் முன்வைத்துள்ளார்.
அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்கவேண்டும் என்று பேசுபவர்கள், எழுதுபவர்கள் உத்திரப் பிரதேச மாநில உயர்நீதிமன்றம் ”அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்கவேண்டும்” என்று தீர்ப்பு வழங்கியுள்ளதை தமிழக அரசும் ஏற்று நடைமுறைப்படுத்தவேண்டும் என்று பேசுவதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்பது புதிராக உள்ளது. இத் தீர்ப்பை ஏற்று தமிழக அரசு சட்டம் இயற்றினால் அரசுப்பள்ளிகள் பாதுகாக்கப்பட உறுதியாக வாய்ப்பு ஏற்படும்.
திருமயம் ஒன்றியம், விராச்சிலை அரசு உதவி பெறும் பள்ளி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியம் வல்லம்பக்காடு அரசுப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், நெடுவாசல் அரசுப் பள்ளி போன்ற பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதைப் பற்றி கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். பல அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ள போதும், இப்பள்ளிகள் சிறப்பாக செயல்பட ஒரு பள்ளித் தாளாளரும் ஒரு சில பெற்றோர்களும், ஒரு சில ஆசிரியர்களும் மட்டுமே காரணமாக இருப்பதை அறிய முடிகிறது.
எனவே ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் ஒரு சில எண்ணிக்கையுடைய அரசு ஊழியர்களின் குழந்தைகள் படித்தால் கூட அரசுப்பள்ளிகள் பாதுகாக்கப்படும் நிலை உருவாகும். ஒரு கிராம நிர்வாக அதிகாரியின் குழந்தை அரசுப்பள்ளியில் படித்தால் கூட, அதுவே அந்தப் பள்ளி சிறப்பாக இயங்க கண்டிப்பாக வழிவகுக்கும். அவரைப் பார்த்து மேலும் சிலரும் தங்கள் குழந்தையை அரசுப்பள்ளியில் சேர்ப்பார்கள்.
இன்று அரசுப்பள்ளிகளில் அடிமட்ட ஏழைகளின் பிள்ளைகள் தான் படிக்கிறார்கள்? இப்படிப்பட்ட பெற்றோர்கள் அரசுப்பள்ளிகளின் செயல்பாட்டைப் பற்றியும் குறைபாடுகளைப் பற்றியும் யாரிடமும் கேள்வி எழுப்ப முடிவதில்லை. எவரிடமும் கேள்வி கேட்கும் வாய்ப்பற்றவர்கள் அரசுப்பள்ளிகளின் பெற்றோர்களாக இருப்பதால் தான் அரசுப்பள்ளிகள் ஒராசிரியர் பள்ளிகளாகவும் மாணவர் இல்லாத பள்ளிகளாகவும் மாறியுள்ளன.
சி.பி.ஐ. (மார்க்சிஸ்ட்) கட்சியின் தலைமையின் வழிகாட்டுதலில் தான் பல்வேறு துறைகளின் அரசு ஊழியர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களும் செயல்படுகின்றன. எனவே அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்போம் என்று அரசு சட்டம் இயற்றாமலேயே அவர்களாகவே முன்வரலாம். தனியார்மயத்தை எதிர்க்கும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் இதைச் செய்வதும் அவர்களின் கொள்கை உறுதிப்பாட்டை பின்பற்றுவதாக அமையும்.
வேறும் வார்த்தைகளால் அரசுப் பள்ளிகளில் எந்த மாற்றமும் நடந்துவிடாது. அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று பேசுபவர்கள் அவரவர்க்கு இயன்றதை செயல் வடிவமாக்கவேண்டும்.
சுமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு. பேசி: 9965128135, 9487995084.
------------கட்டுரையை கீழே இணைத்துள்ளேன் --------------
தருமபுரி மாவட்டம், பாப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில் அரசு ஆரம்பப்பள்ளி கடந்த 30 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை ஒரு மாணவர்கூட இந்தப் பள்ளியில் படிக்கவில்லை. ஐந்தாம் வகுப்பில் மட்டும் நான்கு மாணவர்கள் படித்தனர். அந்த நான்கு மாணவர்களும் தேர்ச்சி பெற்று இவ்வாண்டு ஆறாம் வகுப்பில் சேர அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று விட்டனர்.
தற்போது இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு மாணவர்கூட சேரவில்லை. பள்ளியின் தலைமை ஆசிரியர் மட்டும் வேலை நாட்களில் பள்ளிக்கு வந்து செல்கிறார். இதனால் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அரசுப் பள்ளி தற்போது மூடப்படும் அபாயத்தில் உள்ளது.
இது ஒரே ஆண்டில் உருவான பிரச்னை அல்ல. பல ஆண்டுகளின் தொடர்ச்சிதான் இந்த நிலை உருவாகக் காரணம். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறபோது மாணவர்களைத் தக்க வைக்கவோ, புதிதாக மாணவர்களை சேர்க்கவோ பள்ளி ஆசிரியர்கள் ஏன் முயற்சிக்கவில்லை? இந்த விஷயத்தில் மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஏன் தலையிடவில்லை? மாநில அரசின் கல்வித் துறை என்ன செய்கிறது?
அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதும், தனியார் பள்ளிகளில் அதிகரிப்பதும் கடந்த பல ஆண்டு காலமாக நீடித்து வரும் அவலம். 2001-ஆம் ஆண்டு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 11,68,439-ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2014-இல் 36,17,473-ஆக அதிகரித்தது. ஆனால், மாநில அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்திருக்கிறது.
2008-09-இல் இருந்து 2012-13 வரையிலான நான்கு ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்ட அ.தி.மு.க. அரசு மாணவர்கள் எண்ணிக்கையை தக்க வைப்பதற்கு இலவசமாக புத்தகப்பைகள், கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ், வண்ணப்பென்சில்கள், பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் போன்ற இலவசங்களை வழங்க திட்டமிட்டது