வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற வாய்ப்பு!.

வேலை வாய்ப்பற்ற ஆதி திராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட இளைஞர்கள், அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் ஆதி
திராவிட, பழங்குடியின இளைஞர்கள், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படும் அரசின் உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு, ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

குடும்ப வருமானம், 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமலும், 40 வயதிற்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்,45 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நந்தனம் தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2 தேர்ச்சி, பட்டப்படிப்பு படித்தோர், சாந்தோம், வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெறலாம்.

மாற்றுத் திறனாளிகளை பொறுத்த அளவில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஓராண்டு உயர் பதிவேட்டில் உள்ளவர்கள், கிண்டி, மகளிர் தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிக்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அலுலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம்.

ஏற்கனவே, உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில், விண்ணப்பங்களை சமர்ப்பித்து, ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை, வேலை வாய்ப்பு பதிவு எண், உதவித் தொகை எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...