தமிழ்ப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு...!

 இதுகுறித்து கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) சி. சுந்தரேசன் தெரிவித்திருப்பது:

இப்பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் பிரிவு மூலம் தமிழகத்தில் உள்ள 57 மையங்களில் கல்வியாண்டு மற்றும்
துணைத் தேர்வுகள் மே 21-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற்றன. விடைத்தாள்கள் மதிப்பீடு முடிந்து, தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
முதுநிலை, இளநிலை, பட்டயம், சான்றிதழ் ஆகிய படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை www.tamiluniversity.ac.in, www.tamiluniversity.dde.org ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
தொலைநிலைக் கல்வித் தேர்வு மூலம் நடைபெறும் அனைத்து பாடங்களுக்கும் உரிய காலத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...