லேப்டாப் வழங்குவதில் குளறுபடி : இணை இயக்குனர் தலைமையில் ஆலோசனை

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்குவது குறித்து, ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, சென்னையில் தொழிற்கல்வி இணை இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது,' என கல்வித்துறை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2011 முதல் பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது.

பல லட்சம் மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டன. இதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்களும் வந்தன . பல பள்ளிகளில் மாணவர்கள் படித்து முடித்து சென்ற பின், அவர்களின் பெயரில் லேப்டாப்கள் வாங்கப்பட்டு வெளிசந்தையில் விற்கப் பட்டுள்ளன. சில பள்ளிகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு லேப்டாப்கள் திருடப்பட்டன. இதையடுத்து மாணவர்களின் ஆதார் எண் இருந்தால் மட்டுமே லேப்டாப் வழங்க வேண்டும், மாணவர்களின் கையெழுத்து அவசியம் என கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. ஒரு பள்ளிக்கு எத்தனை லேப்டாப்கள் தேவை என்பதை பள்ளி தலைமையாசிரியர் தான் அரசு தெரிவிக்க வேண்டும். அதன்பின் எல்காட் மூலம் நேரடியாக பள்ளிக்கு அனுப்பும். கூடுதலாக உள்ள லேப்டாப்கள் கலெக்டருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும்.

நான்கு நாட்கள் : 2016 -- 17 ஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்குவது குறித்து, ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், சென்னையில் தொழிற்கல்வி இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி தலைமையில் 8 மாவட்டங்களாக பிரித்து, ஜூலை 19, 20,21,22 என நான்கு நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...