திருநங்கைகளுக்கான நல வாரியம் அமைத்து அரவாணிகள் என்று அழைக்கப்பட்டவர்களை திருநங்கைகள் என்று பெயர் சூட்டியது கடந்த திமுக அரசு. அதை, திருநங்கைகள் தங்களுக்குக் கிடைத்த கவுரமாகப் பார்க்கின்றனர். ஆனால், இன்னும் பரந்துபட்ட தளத்தில் திருநங்கைகளுக்கான அங்கீகாரம்
கிடைக்கவில்லை. அரசுப் பள்ளியில்கூட திருநங்கைகளை சேர்க்கமுடியாத சூழல் நிலவுகிறது. காரணம், பெற்றோர்களுக்கு பயந்து பள்ளி நிர்வாகங்கள் திருநங்கைகளை பள்ளிகளில் சேர்ப்பதில்லை.அரசுப் பள்ளியில் படிக்க இடம்கேட்டு திருநங்கைகள் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தின்முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மவாட்டத்தைச் சேர்ந்த தாரிகாபானு வயது 21. திருநங்கையான இவரை தன் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததால் ஓராண்டுக்குமுன்பு திருவள்ளூர் மாவட்டத்துக்கு வந்தார். பின், அம்பத்தூரைச் சேர்ந்த பானு என்ற திருநங்கையின் பாதுகாப்பில் வசித்துவந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சீவலப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2013 -2014ஆம் ஆண்டில் 11ஆம் வகுப்பு படித்து முடித்தவுடன் திருவள்ளூர் மாவட்டம் வந்த தாரிகா, மேற்படிப்பை படிக்க விரும்பினார். அதனால் கடந்த ஒரு மாத காலமாக அம்பத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குச் சென்று தன்னை 12ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால், பள்ளிகளில் தாரிகா படிக்க விரும்பிய 12ஆம் வகுப்பு அறிவியல்பிரிவில் தமிழ் மீடியம் இல்லை என்று சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளனர்.
அம்பத்தூர் காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தம்மைச் சேர்க்க கேட்டு அந்தப் பள்ளிக்கும், முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கும் அலைந்துதிரிவதாக தாரிகா கூறுகிறார். அலைந்தும் பலனில்லை. எனவே, தாரிகாபானுவும் பானுவும் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்குமுன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சீதாலட்சுமி ஆய்வுக்காக திருவொற்றியூர் சென்றதால் அங்குள்ள உதவியாளர்கள் தாரிகாபானுவை பள்ளியில் சேர்த்துக்கொள்ளுமாறு, அம்பத்தூர் காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தும் கடிதம் ஒன்றை அவர்களிடம் கொடுத்தனர். மூன்று மணி நேரத்துக்குப்பின் திருநங்கைகளின் தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது. போராடித்தான் சின்னச்சின்ன உரிமைகளைக்கூட திருநங்கைகள் பெற வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த திருநங்கை கிரேஸ் பானு இதுபற்றி என்ன சொல்கிறார்?

‘‘எனக்கு வெகுநாள் ஆசை, கனவு என்றே கூறலாம், ஆம்! திருநர்களின் கல்வி பாதியிலேயே முடிந்து விடுகிறது. அப்படி முடியக் கூடாது. ஒரு திருநங்கையோ அல்லது திருநம்பியோ தன் சுய அடையாளத்தோடு பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதுதான். அது நடக்க பல ஆண்டுகள் ஆகுமோ என்பதை தகர்த்தெரிந்துவிட்டார் தாரிகா பானு. இவள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவள். அங்குள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்புவரை படித்தாள். பின்பு, பாலின மாற்றம் செய்யவேண்டும் என என்னிடம் கேட்டுக்கொண்டார். அறுவை சிகிச்சை எல்லாம் முடிந்தபின்னர், மேற்கொண்டு எனக்கு படிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். நானும் யோசித்தேன். உச்சநீதிமன்றம் நமக்கு உரிமை வழங்கியிருக்கிறது, ஆகவே முயற்சி செய்து பார்க்கலாம் என்று, கடந்த ஒரு மாதத்துக்குமுன் எங்களுக்கு அருகாமையில் உள்ள பல அரசுப் பள்ளிகளில் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் அறிவியல் பாடப்பிரிவு இங்கே இல்லை, ஆங்கிலவழிதான் இருக்கிறது என்று சொல்லிவைத்தாற்போல் பதில் கூறினர். இவர்கள் பொய் கூறுகிறார்கள் என்று அப்பட்டமாகத் தெரிந்தது.
அதன்பின்புதான், திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும், மாவட்ட கல்வி அலுவலருக்கும் மற்றும் தலைமை செயலாளருக்கும் மனு அனுப்பினோம். எந்தவிதப் பதிலும் இல்லாததால் நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் அலுவலரைச் சந்திக்க நேரில் சென்றோம். அதிகாரி இல்லை என வழக்கம்போல பதில் அளித்தார்கள். அவர்கள் நடத்தையில் வழக்கமான அலட்சியப் பார்வை தெரிந்தது. நான் அவர்களிடம் "எங்கள் பகுதிக்கருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அந்த பாடப்பிரிவு இருக்கிறது. அவர்கள் எங்களிடம் பொய் சொல்கிறார்கள்" என்று முதன்மை அலுவலர் உதவியாளரிடம் கூறினேன். அவரும் "அந்தப் பள்ளியில் அறிவியல் பாடப்பிரிவு தமிழ்வழி இல்லை என்று கூறினார். "நீங்களூம் ஏன் பொய்கூறுகிறீர்கள். பள்ளியில் சேத்துக்க முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லுங்க. அதைவிட்டுவிட்டு ஏன் இப்படி பொய் சொல்றீங்க" என்று கேட்டேன். அவர் பதில்கூறாமல் சென்றுவிட்டார்.
நான் இதற்குமேல் இதை சகித்துக்கொள்ள முடியாது என்று தர்ணா போராட்டதில் ஈடுபட்டேன். விஷயம் வெளியுலகத்துத் தெரிந்துவிட்டதை அறிந்த அவர்கள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ‘‘நீங்கள் ஆண்-பெண் இருபாலரும் படிக்கும் பள்ளியில் கேட்டால் ஒரு பிரச்னையும் இல்லை. பெண்கள் பள்ளியில் கேட்பதால் எங்களால் முடியாது’’ என்றார்கள். நான் மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தேன். ‘‘பெண்கள் பள்ளியில் சேர்த்துக்கொள்கிறோம். உங்களால் சக மாணவிகளுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று எழுதிக் கொடுங்கள்’’ என்றனர். நான் கூறினேன், ‘‘நீங்கள் எனக்கு எழுதிக் கொடுங்கள். உங்களால் இந்த திருநங்கைக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று’’ என்பதாக.
பின்னர் வெகுநேர விவாதத்துக்குப்பிறகு ஒருவழியாக பள்ளியில் சேர்க்க ஆணை வழங்கினார்கள். இப்படி ஒவ்வொரு கட்டமும் வாழ்வில் போராடித்தான் வெற்றி பெறுகிறோம் என்று கூறினார்.