டில்லியில் உள்ள, ஸ்ரீராம் காலேஜ் ஆப் காமர்ஸ் என்ற வணிகவியல் கல்லுாரியில், பி.காம்., ஹானர்ஸ் படிக்க, கடும் போட்டி ஏற்படுவது வழக்கம். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, இங்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
மெட்ரிக் பள்ளிகள்
இந்த கல்லுாரியில் சேரும் மாணவர்கள், விடுதியில் தங்கி, சி.ஏ., - ஐ.சி.டபிள்யு.ஏ., போன்ற ஆடிட்டர் படிப்புக்கும், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கும் தயாராகின்றனர். இந்த கல்லுாரியில் சேருவோருக்கு, படிப்பை முடித்ததும், பணி கிடைக்கிறது. இந்த ஆண்டு மொத்தமுள்ள, 160 இடங்களில், முதலில், 110 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. இதில், முதல் பட்டியலில் இடம் பிடித்த, 50 மாணவர்கள், ஈரோடு பாரதிய வித்யாபவன் மெட்ரிக் பள்ளியை சேர்ந்தவர்கள். அவர்களில், 43 பேர் சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து, பாரதிய வித்யாபவன் பள்ளி முதல்வர் எம்.எஸ்.கார்த்தியாயினி கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும், எங்கள் பள்ளி மாணவர்கள், வணிகவியல் பாடப்பிரிவில் முன்னணி பெறுவது வழக்கம். பிளஸ் 2 வகுப்பில், 612 பேரில், 212 மாணவர்கள் வணிகவியல் படித்தனர். ஒவ்வொரு ஆண்டும், வணிகவியல் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அவர்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, டில்லி ஸ்ரீராம் கல்லுாரி, பெங்களூரு கிறிஸ்ட் கல்லுாரி, சென்னை லயோலா கல்லுாரி, சென்னை மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் போன்றவற்றில் சேர்கின்றனர்.
உயர் பதவிகள்
எங்கள் மாணவர்கள் பி.காம்., முடித்து, அதிக அளவில், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை, ஏழுக்கும் மேற்பட்டவர்கள், சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்று, உயர் பதவிகளில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பள்ளியில், பெரும்பாலும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களே படிக்கின்றனர். அதே போல், ஈரோட்டில் குடியமர்ந்துள்ள, வடநாட்டு டெக்ஸ்டைல் அதிபர்களின் பிள்ளைகளும் இங்கு படிக்கின்றனர்.