வட மாநிலங்களில் பெண் குழந்தைகளின் கல்வி சதவீதம் குறைவாக உள்ளதாக புள்ளி விபர ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
2014ம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி, கல்வி நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்ட 21 முக்கிய மாநிலங்களில் குஜராத்
20வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் 21 வது இடத்தில் உள்ளது. குஜராத்தில்15 முதல் 17 வயதிற்குற்பட்ட சுமார் 26.6 சதவீதம் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாதவர்களாகவோ அல்லது பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களாகவோ உள்ளனர்.
பீகாரில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 83.3 சதவீதமாகவும், அசாமில் 84.8 சதவீதமாகவும், ஜார்கண்டில் 84.1 சதவீதமாகவும், சட்டீஸ்கரில் 90.1 சதவீதமாகவும், ம.பி.,யில் 79.2 சதவீதமாகவும், உ.பி.,யில் 79.4 சதவீதமாகவும், ஒடிசாவில் 75.3 சதவீதமாகவும் உள்ளன. அதே சமயம் குஜராத்தில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 73.4 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 72.1 சதவீதமாகவும் உள்ளன.