பொது பிரிவினருக்கான பி.டெக்., கவுன்சிலிங் துவக்கம்.

பொது பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களுக்கான பி.டெக்., கவுன்சிலிங் இன்று துவங்குகிறது.

புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலத்தில், கடந்த 2ம் தேதி பி.டெக்., பி.பார்ம் படிப்புகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு கவுன்சிலிங் நடந்தது.


இதில், மாற்றுத்திறனாளிகள், விடுதலை போராட்ட வாரிசு, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, விளையாட்டு வீரர்கள் பங்கேற்று சீட் எடுத்தனர்.

இன்று 4ம் தேதி பொது பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களுக்கான பி.டெக்., கவுன்சிலிங் துவங்குகிறது.காலை 9 மணிக்கு துவங்கும் முதலாம் அமர்வு கவுன்சிலிங் கட் ஆப் மதிப்பெண் 199 முதல் 194 வரை எடுத்த 104 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

தொடர்ந்து 10 மணிக்கு 193.667 முதல் -191.333 வரை, 11 மணிக்கு 191 முதல் -188.444 வரை, 12 மணிக்கு,188.333 முதல் 186.333 வரை, 2 மணிக்கு186 முதல் 184 வரை, 3 மணிக்கு 183.778 முதல் 182 வரை, 4 மணிக்கு 181.778 முதல் 179.667 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.

ஒட்டுமொத்தமாக இன்றைய கவுன்சிலிங்கில் பங்கேற்க, 726 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை 5 ம் தேதி நடக்கும் மூன்றாம் கவுன்சிலிங்கில் 179.556 முதல் 165 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...