கோவை அரசு கலைக் கல்லுாரியில் இளங்கலை முதலாமாண்டு காலியிடங்களுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று நடக்கிறது.
கோவை அரசு கலைக் கல்லுாரியில் இளங்கலை படிப்பிலுள்ள, 1,359 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் நடந்தது.
மாணவர்களின் தரவரிசை பட்டியல் அடிப்படையில் நடந்த முதற்கட்ட கலந்தாய்வில், 1,353 மாணவர்கள் சேர்க்கை புரிந்தனர். நிறைவில், ஆறு இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன.
கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள், இன்ஜி., உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு மாறுதல், வேறு கல்லுாரிகளுக்கு இடம்பெயர்தல், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காதவர் என பல்வேறு காரணங்களால் கல்லுாரியிலிருந்து வெளியேறியவர்களால், 144 இடங்கள் காலியாகின. காலியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று நடக்கிறது.
காலை, 9:00 - 11:00 மணி வரை, 1 - 2,500 கட் ஆப் மதிப்பெண் வரையும், 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை, 2,501 - 5,500 கட் ஆப் வரையும், மதியம், 5501 கட் ஆப் முதல் கலந்தாய்வு நடக்கிறது. இதில், மே, 27ம் தேதிக்குள் சரியாக விண்ணப்பித்த மாணவர்கள், கலந்தாய்வில் பங்கேற்று இடம் கிடைக்காதவர்கள், பங்கேற்காதவர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என, துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி புகழேந்தி தெரிவித்துள்ளார்.