நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு !

*நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு*

_தமிழக அரசால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்._


*தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அவர் அறிவித்ததாவது,*

_தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு பரிசுத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது._

_நல்லாசிரியர் விருது பெற ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த தொகை உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்._

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...