*18 வயது ஆனாலும் பிள்ளைகளின் கல்வி செலவை பெற்றோர் தான் செய்யவேண்டும் !

புனே, 18 வயது ஆனாலும் பிள்ளைகளின் கல்வி செலவை பெற்றோர் தான் செய்யவேண்டும் என புனே குடும்ப நல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.கல்வி செலவில் விலக்கு



புனே குடும்ப நல கோர்ட்டில் சமீபத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவியின் தந்தை ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘என் மனைவியை நான் விவாகரத்து செய்துவிட்டேன். கோர்ட்டு உத்தரவுப்படி மனைவிக்கு மாதம் ரூ.20 ஆயிரம் ஜீவானம்சமும், மகளின் கல்வி செலவுகளையும் கவனித்து வருகிறேன். தற்போது எனது மகளுக்கு 18 வயது ஆகிவிட்டது. அவர் மேஜராகிவிட்டார்.எனவே இந்து திருமண சட்டப்படி நான் அவரது கல்வி செலவை செய்ய வேண்டியதில்லை. எனவே அவருக்கான கல்வி செலவை நான் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும். மேலும் எனது மகள் விவாகரத்தான மனைவியுடனே வசித்து வருகிறார். அவரும் வேலை செய்து அதிகளவு சம்பாதிக்கிறார்’’ எனக்கூறி இருந்தார்.பெற்றோரே ஏற்கவேண்டும்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கூறியதாவது:–இந்தியாவில் பிள்ளைகள் படித்து கொண்டே சம்பாதிப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. முந்தைய கோர்ட்டு உத்தரவில் 18 வயது வரை மட்டுமே பிள்ளையின் கல்வி செலவை கவனித்தால் போதும் என எந்த இடத்திலும் கூறப்படவில்லை. உண்மையை கூறவேண்டும் என்றால் 18 வயதில் தான் பிள்ளைகள் கல்லூரி படிப்பையே தொடங்குவார்கள். அப்போது தான் பிள்ளைகளுக்கு பெற்றோரின் நிதி உதவி அதிகளவு தேவைப்படும்.எனவே பிள்ளைகளுக்கு 18 வயது ஆனாலும் அவரது கல்வி செலவை பெற்றோர் தான் செய்யவேண்டும். மேலும் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...