குரூப் - 1 நேர்முக தேர்வு பட்டியல் வெளியீடு...!

குரூப் - 1 பதவியில், துணை கலெக்டர் உள்ளிட்ட, 79 காலியிடங்களை நிரப்புவதற்கான, நேர்முகத் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு, 2015 ஜூன், 5, 6 மற்றும், 7ம் தேதிகளில் நடந்தது; 3,407பேர் பங்கேற்றனர்.

இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தேர்வர்களின் மதிப்பெண், 'கட் - ஆப்' தரவரிசை போன்ற விவரங்கள், பதிவெண்களுடன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வு, வரும், 19ம் தேதி முதல் நடக்க உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...