உயர் சிறப்பு மருத்துவ படிப்பு; 2ம் கட்ட கலந்தாய்வு !

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை நடக்கிறது.
தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், டி.எம்., மற்றும் எம்.சி.எச்., என்ற, மூன்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு

, 189 இடங்கள் உள்ளன; இதற்கான கலந்தாய்வு, ஜூலை, 26ம் தேதி நடந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வெளி மாநில டாக்டர்களும் முதல் முறையாக பங்கேற்றனர்; இதில், 155 இடங்கள் நிரம்பின.

இதில், எம்.சி.எச்., படிப்பில், 30; டி.எம்., படிப்பில், நான்கு இடங்களும் மீதம் உள்ளன. இதற்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சென்னை, மருத்துவக் கல்வி இயக்கத்தின், மாணவர் சேர்க்கை செயலர் அலுவலகத்தில், நாளை நடக்கிறது.

மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...