வீட்டுப்பாடம் செய்யாததால் ஆத்திரமடைந்த டியூசன் ஆசிரியை ‘பெல்ட்‘டால் அடித்ததில் 2-ம் வகுப்பு மாணவி காயமடைந்தாள். தலைமறைவான டியூசன் ஆசிரியையை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
2-ம் வகுப்பு மாணவிக்கு அடி
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா டவுன் சுபாஷ் நகரில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருடைய மகள் பாவனா (வயது 7). இவள், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரு கிறாள். பள்ளி முடிந்தவுடன் பாவனா கூடுதல் பயிற்சிக்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் டியூசனுக்கு சென்று வருகிறாள்.
நேற்று முன்தினம் பாவனா, வீட்டுப்பாடம் செய்யாமல் டியூசனுக்கு சென்றதாக தெரிகிறது. இதை அறிந்த டியூசன் ஆசிரியை லதா, சிறுமியை கண்டித்துள்ளார். மேலும், அவர் ‘பெல்ட்‘டால் பாவனாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், பாவனாவின் உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டன.
ஆசிரியைக்கு வலைவீச்சு
இதனால் பாவனா, டியூசனில் இருந்து அழுது கொண்டே தனது வீட்டிற்கு திரும்பினாள். மேலும், உடலில் இருந்த காயங்களை காண்பித்து கண்ணீர் மல்க சம்பவம் குறித்து அவள் தனது பெற்றோரிடம் கூறினாள். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாவனாவை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
மேலும், பாவனாவின் பெற்றோர் சார்பில் நெலமங்களா போலீசில் டியூசன் ஆசிரியை லதா மீது புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து அறிந்த லதா தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் பற்றி நெலமங்களா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள லதாவை வலைவீசி தேடிவருகிறார்கள்.