3 பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் துணைவேந்தர் நியமனம் !

தமிழகத்தின் மிக முக்கிய பல்கலைக்கழகங்களான சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களும் துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.


சமீபத்தில், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அப்போதே, துணைவேந்தர் இல்லாமலேயே கலந்தாய்வு நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரையில், துணைவேந்தர் இல்லையென்றால் அந்தப் பொறுப்பு பதிவாளருக்கு வழங்கப்படும். ஆனால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ராஜினாமா செய்யப்பட்ட செனட் உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடத்தப்படவில்லை. எத்தனைமுறை நினைவூட்டல் கடிதம் எழுதினாலும் உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று காலியாக உள்ள துணைவேந்தர்கள் பதவி எப்போது நிரப்பப்படும் என்ற கேள்விக்கு, பதிலளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், சென்னை பல்கலைக்கழகம் துணைவேந்தர் ஓய்வுபெற்றவுடன், அந்தப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. துணைவேந்தர் பணிகளின் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டு, துணைவேந்தரின் பணிகள் தொய்வின்றி நடைபெற்றுவருகின்றன.

அதேபோல, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும், கூட்டுக்குழு கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டு, பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கன்வீனர் கமிட்டியில், உயர்கல்வித்துறை செயலாளர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், அண்ணா பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் நாராயணசாமி ஆகியோர் உறுப்பினராக இருந்து செயல்படுகின்றனர்.

விரைவில், துணைவேந்தர் தேர்தல் குழு நியமிக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரையின்பேரில், ஆளுநரால் துணைவேந்தர் நியமிக்கப்படுவார் என்று அமைச்சர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...