நேற்று 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் !

திருவண்ணாமலையில், போதையில் பள்ளிக்கு வந்த இரு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கருமாரப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், நேற்று முன்தினம், குடிபோதையில் பணிக்கு வந்த,
ஆசிரியர் கருணாநிதியை கண்டித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன் விசாரணையில், ஆசிரியர்கள் கருணாநிதி, பாண்டியன் இருவரும், போதையில் பள்ளிக்கு வருவது தெரிந்தது. இதையடுத்து இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.

* துரிஞ்சிக்குப்பம் துவக்க பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி, சுதந்திர தினத்தன்று, காலை, 11:00 மணிக்கு பள்ளிக்கு சென்று, மாணவர்கள், ஆசிரியர்கள் யாரும் இல்லாத போது, தனியாக தேசியக் கொடி ஏற்றினார். இதனால், அவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...