அடுத்த 4 ஆண்டுகளில் சூரியனை ஆய்வு செய்வோம் என்று இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார். ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழா நிறைவு நாளில் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: 1999ம் ஆண்டில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் முதல்முறையாக
பேச வாய்ப்பு கிடைத்தது. புத்தகம் படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற உணர்வு அதற்கு பின்னர் தான் ஏற்பட்டது. சந்திரயான், மங்கள்யான் பயணம் குறித்து தமிழில் புத்தகங்கள் எழுதத் தொடங்கினேன்.
பூமியில் இருந்து நிலவை அடைய வேண்டுமானால் 3.86 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். ஒரு விநாடிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் நிலா பயணிக்கிறது.

அதுபோலவே, செவ்வாய் கிரகத்தை அடைய 40 கோடி கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். ஒரு விநாடிக்கு 24 கிலோ மீட்டர் வேகத்திற்கு செவ்வாய் கிரகம் செல்கிறது. சரியான நேரத்தில், சரியான திசையில், சரியான வேகத்தில் சென்றால்தான் செவ்வாய் கிரகத்தையும், சந்திரனையும் அடைய முடியும்.
அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளில் முதல் முயற்சியிலேயே செவ்வாய்கிரகத்தை அடைய முடியவில்லை. ஆனால், இந்தியா முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்தது. ஒரு காலத்தில் ஆண்டுக்கு நான்கு செயற்கைக்கோள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டில் 10 செயற்கைக் கோள்களை தயாரித்துள்ளோம். வெளி நாடுகளுடன் ஒப்பிடும்போது, குறைந்த செலவில், குறைவான காலத்தில் இந்தியாவில் செயற்கைக்கோள்களை தயாரிக்க முடிகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில் சூரியனை ஆய்வு செய்வோம்.