தனித்தனியாக கழிவறைகள் இல்லாத 5 ஆயிரத்து 720 பள்ளிகளுக்கு கழிப்பறைகள்!

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:சட்டப்பேரவையில் நேற்று (ஆகஸ்ட் 9) பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின், அரசுப் பள்ளிகளில் கழிவறைகள் அமைப்பது பற்றி குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார்.
கழிவறை இல்லாத 2 ஆயிரத்து 57 பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்பட்டு, அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதை கடந்த 30-7-2014-ல் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக கழிவறைகள் இல்லாத 5 ஆயிரத்து 720 பள்ளிகள்கண்டறியப்பட்டு கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிவறைகள்கட்டப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 4 ஆயிரத்து 339 கூடுதல் கழிப்பறைகள் கட்ட ரூ. 59 கோடியே 25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...