கோவை பாரதியார் பல்கலைக்கு, புதிதாக எட்டு செனட் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாரதியார் பல்கலை வேந்தர் மற்றும் ஆளுநர் ரோசய்யா காலியாக இருந்த, எட்டு செனட் உறுப்பினர்களை தேர்வு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்.
இதன்படி, சென்னை எம்.எஸ்.சுவாமிநான் ஆராய்ச்சி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி பரசுராமன் (அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு நிறுவனம்), சுபாஷ் சந்திரன் (எழுத்தாளர்), சென்னை மைலாப்பூர் நுண் கலை மையத்தை சேர்ந்த ஜலதீபா (அங்கீகரிக்கப்பட்ட கலாசார சங்கம்), சென்னை பகவான்சிங் (பத்திரிகையாளர்), துரை ஆனந்தன் (அரசு தரப்பு சிறப்பு வக்கீல்), கோவை சக்தி சுகர்ஸ் நிறுவன துணை தலைவர் பாலசுப்பிரமணியன் (வர்த்தக சபை), கவுண்டம்பாளையம், அனன்யா செல்டர்ஸ் நிர்வாக இயக்குநர் யுவராஜ் ஆறுமுகம் (தொழில்துறை), மதுரை காமராஜர் பல்கலை உடற்கல்வித்துறை தலைவர் சந்திரசேகரன் (விளையாட்டு)ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, பல்கலை நிர்வாக தரப்பில் கேட்டபோது, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என தெரிவித்தனர்.