ஆசிரியர்கள் அடித்ததால் 9–ம் வகுப்பு மாணவர் தற்கொலை; மூவர் தலைமறைவு !

கோவை மாவட்டம், வடவள்ளி பெரியார்நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஆவின் பூத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய 3–வது மகன் பாபு (வயது-14). வெங்கிட்டாபுரத்தில் உள்ள அரசு
பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் சாணி பவுடரை கரைத்து குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் பாபு
கிடந்தார். உடனே அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாபு பரிதாபமாக இறந்தார்.

     இது குறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், தற்கொலை செய்வதற்கு முன்பு மாணவர் பாபு எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில் பாபு கூறியிருப்பதாவது:–

நான் வெங்கிட்டாபுரம் அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படிக்கிறேன். கடந்த 8–ந்தேதி திங்கட்கிழமை அறிவியல் ஆசிரியர் என்னுடன் படிக்கும் மாணவரை அடித்தார். நான் அந்த மாணவரிடம் ‘வாட் இஸ் யுவர் பிராப்ளம்’ என்று ஆங்கிலத்தில் கேட்டேன்.

ஆனால் ஆசிரியர் தவறாக புரிந்து கொண்டு, என்னை பார்த்து இந்த கேள்வியை கேட்கிறாயா...? என்று கூறி என்னை அடித்தார். நான் உங்களை கூறவில்லை. அந்த மாணவனிடம் தான் கேட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினேன். இருந்தாலும் ஆசிரியர் நம்பவில்லை. பின்னர் அந்த ஆசிரியர் என்னை அழைப்பதாக மாணவர்கள் கூறினர். பின்னர் அந்த ஆசிரியருடன் மேலும் 2 ஆசிரியர்கள் சேர்ந்து என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு என்னை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து என்னுடைய பெற்றோரிடம் நான் கூறினேன். என் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ‘ஹெல்ப்லைனு’க்கும் போன் செய்தேன். அவர்களும் “விசாரிக்கிறோம்..” என்று கூறிவிட்டு ஒன்றும் செய்யவில்லை. 3 ஆசிரியர்கள் திரும்ப, திரும்ப எப்போதும் அடித்துக்கொண்டே இருந்தனர். நான் ஒரு கெட்ட பையன் என்று கூறி என்னை அவமானப்படுத்தினார்கள். நான் எப்போதும் அடியும், திட்டும் வாங்க தயாராக இல்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கூறியதாவது:– மாணவரின் தற்கொலை தொடர்பாக அவரது தந்தை நாகராஜ் புகார் கொடுத்துள்ளார். இதற்கிடையே மாணவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளோம். அந்த கடிதத்தில் 3 ஆசிரியர்கள் தற்கொலைக்கு காரணம் என்று மாணவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர், பள்ளி ஆசிரியர்களிடையே தகராறு ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவர் எழுதியதாக கூறும் கடிதத்தில் இருப்பது அவருடைய கையெழுத்து தானா என்ற உண்மையை அறிய, அந்த கடிதம் பரிசோதனைக்கு சென்னைக்கு அனுப்பப்பட உள்ளது. தற்போது தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவரின் கடிதமும், அதில் குறிப்பிட்டு இருப்பதும் உண்மை என்று தெரியவந்தால் 3 ஆசிரியர்கள் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.

இதற்கிடையில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மூன்று ஆசிரியர்களும் நேற்று பள்ளிக்கு வராமல் தலைமறைவாகி விட்டனர். ஆசிரியர்கள் அடித்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டசம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தித்தி உள்ளது.    நண்பர்களே பணியில் கவனமாக இருக்கவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...