மத்திய அரசு பல்வேறு விதங்களில் இடையூறுகளை அளித்தாலும் முக்கிய விவகாரங்களில் வரம்புக்குட்பட்ட அதிகாரத்திலும் ஆம் ஆத்மி உலகம் முழுதும் புகழ்வதற்குரிய சில நல்ல பணிகளைச் செய்துள்ளது என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
சுதந்திர தின உரையாற்றிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டெல்லி மக்கள் தாங்களே கல்வியறிவை வளர்த்துக் கொள்ளவும் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த ஆக்கபூர்வமான பணிகளையும் செய்துள்ளோம்.
ஒரு நாட்டின் வளர்ச்சியில் மக்களுக்குத்தான் உண்மையான பங்களிப்பு உள்ளது, அரசுக்கு அல்ல. அரசின் கடமை என்னவெனில் மக்களை தயார்படுத்துவதே.
கல்வி மற்றும் மருத்துவத்தில் வரலாற்று சிறப்பான முடிவுகளை எடுத்து வருகிறோம். கடந்த 65 ஆண்டுகளில் 11,000 அரசுப்பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன, ஆனால் ஆம் ஆத்மியின் ஓராண்டு ஆட்சியில் 8,000 புதிய வகுப்பறைகளை கட்டியுள்ளோம், இது 200 புதிய பள்ளிகளுக்குச் சமமானது.
பல தனியார் பள்ளிகள் தாறுமாறாக கட்டணத்தை அதிகரித்து வந்தனர். இதனால் பெற்றோர் வருத்தமடைந்தனர். முந்தைய அரசு அவர்களது கட்டணக்கொள்ளையை தடுத்து நிறுத்தவில்லை, காரணம் அமைச்சர்கள் பள்ளிகளின் பாக்கெட்டுகளில் இருந்தனர். ஏனெனில் தங்கள் உறவினர், குடும்பத்தினர் குழந்தைகளுக்கு இவர்களுக்கு அங்கு அட்மிஷன் தேவைப்பட்டது.
ஆனால் எங்கள் அரசில் நானோ அமைச்சர்களோ எந்தவித பரிந்துரைகளையும் மேற்கொண்டதில்லை. என் மகனே நொய்டாவுக்குத்தான் செல்கிறான். டெல்லியின் முதல்வராக நான் தனியார் பள்ளியில் வெகுசுலபமாக அட்மிஷன் வாங்கி விட முடியும். ஆனால் நான் இதனைச் செய்தால் இந்த தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை தடுத்து நிறுத்த முடியா கோழையாகி விடுவேன்.
எந்த ஒரு தனியார் பள்ளியும் கட்டணத்தை அதிகரிக்க விடாமல் செய்துள்ளோம்.
அதேபோல் அரசுப்பள்ளிகள் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள் அருமையான பலன்களை அளித்துள்ளன. ஆசிரியர்களும் பெற்றோர்களும் அழகான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதே போல் மருத்துவத் துறையில் அரசு மருத்துவமனைகளில் டெல்லியில் மருந்துகள், பரிசோதனைகள் முழுதும், ‘முழுதும்’ இலவசமாக்கியுள்ளோம்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 100 கிளினிக்குகளை ஏற்படுத்தியுள்ளோம், டிசம்பருக்குள் மேலும் 1,000 கிளினிக்குகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.