சிறுபான்மை மாணவர் உதவித்தொகை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும், முஸ்லிம், கிறிஸ்துவ, பார்சி, ஜெயின்,
புத்த மற்றும் சீக்கிய இனத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு, 1ம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாணவ, மாணவியர், http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி, ஆக., 31 என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, செப்., 30 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, ஒரு மாத அவகாசம் தரப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...