திருப்பூர் :"பாயின்ட் ஆப் சேல்' கருவியில், ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் விவரங்களை பதிவு செய்யும் பணி இன்று துவங்குகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, ஒன்பது தாலுகாக்களில், ஏழு லட்சத்து, 40 ஆயிரத்து, 342 ரேஷன் கார்டுகள் உள்ளன. பகுதி நேர கடை 306; முழு நேர
கடை 829 என, 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. ரேஷன் கார்டுகள், டிச., மாதத்துடன் காலாவதியாவதால், "ஸ்மார்ட்' கார்டு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, ரேஷன் கடைகள், அதற்கு தயார் செய்யப்பட்டு வருகின்றன.
ரேஷன் பொருள் ஒதுக்கீடு, வினியோகம் உட்பட, அனைத்து வகையான பணிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட உள்ளன. "பாயின்ட் ஆப் சேல்' என்ற "லேப்-டாப்' போன்ற கருவி, ரேஷன் கடை ஊழியருக்கு வழங்கப்பட்டு, சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களின் விவரங்களை பதிவு செய்யும் பணி துவங்குகிறது.
ரேஷன் கார்டில் உள்ள, குடும்ப தலைவர் உட்பட, அனைத்து உறுப்பினரின் விவரங்களும், "பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்யப்பட உள்ளது. பெயர், ரேஷன் கார்டு எண், "அ' பதிவேட்டில் உள்ள எண், குடும்ப உறுப்பினர் அனைவரின் ஆதார் எண் ஆகியவை, பதிவு செய்யப்பட உள்ளது.குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ரேஷன் கடைகள் தோறும்,
கார்டுதாரரின் விவரங்களை பதிவு செய்யும் பணி துவங்க உள்ளது. இன்றும், வரும் 16ம் தேதி முதல் தொடர்ந்து பதிவு பணி நடக்கும். விவரங்களை பதிவு செய்ததும்,
"உங்களது கார்டு பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று, மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படும்.வரும், அக்., மாதம் வரை, கார்டு விவரங்களை பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடக்கும். அதற்கு பிறகு, அனைத்து விதமான ரேஷன் பொருள் வினியோகமும்,
"பாயின்ட் ஆப் சேல்' கருவி மூலமாக மட்டுமே நடக்கும்.
முதல் கட்டமாக, ரேஷன் கடைகள் தயார்படுத்தப்படுகிறது. விரைவில், "ஸ்மார்ட்' கார்டு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கார்டுதாரரின் முழு விவரமும், "பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதியப்படு
கிறது. அதன்படி, ஒரே மாதத்தில்,"ஸ்மார்ட்' ரேஷன் கார்டு தயாரிக்க முடியும். வரும், 2017 ஜன., மாதத்தில் இருந்து "ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாட்டுக்கு வர அதிக வாய்ப்புள்ளது.
"ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பயன்பாட்டுக்கு வரும் போது, கார்டை மற்றொருவரிடம் கொடுத்து, பொருட்களை பெற முடியாது.
கார்டில் பெயர் உள்ள யாராவது சென்று, கைவிரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே, அந்த கார்டுக்கான பொருட்களை வழங்க முடியும்.அதற்காகவே, "பாயின்ட் ஆப் சேல்' மெஷின் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும், தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டை எடுத்துச்சென்று, ரேஷன் கடைகளில் பதிவு செய்து கொள்ள, 45 நாட்கள்
அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.