நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் எட்டு தலைமை நீதிபதி உள்பட 443 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய சட்ட அமைச்சகம் தொகுத்த தரவுகளின்படி, நாட்டில் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் 1,044 நீதிபதி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 443 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. இதில் அலகாபாத் நீதிமன்றத்தில்தான் அதிகளவிலான பணியிடங்கள், அதாவது 86
காலியிடங்கள் உள்ளன. இதற்கு அடுத்தப்படியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 38 பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 60-லிருந்து 75 ஆக உயர்த்தப்பட்டது. மும்பை, பஞ்சாப், ஹரியானா மாநில உயர்நீதிமன்றங்களில் தலா 35 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், திரிபுரா மாநிலத்தில் காலியிடம் ஏதும் இல்லை. உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 31 பணியிடங்களில் தற்போது ஐந்து இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி தேசிய நீதித்துறை நியமனங்கள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த காலகட்டங்களில் உச்ச, உயர்நீதிமன்றங்களில் காலியாக இருந்த நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
டெல்லியில் வருடாந்திர முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டு மேடையில் பிரமதர் அமர்ந்திருக்க, அவர் முன்னிலையில் பேசினார் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர். மோடி அரசின் நீதிமன்றத்துக்கு எதிரான யதேச்சதிகாரச் செயல்களை மறைமுகமாகச் சுட்டிக் காண்பித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர் குரல் உடைந்து, நா தழுதழுத்தார். மீண்டும் தன் சுதந்திர தின உரையிலும் மத்திய அரசின் மெத்தனப் போக்கை வருத்தத்தோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் தலைமை நீதிபதி.
ஒரு அரசு சட்டத்தின் ஆட்சியை அழித்தொழிக்காமல் நாட்டின் எதிர்காலத்தை எண்ணி அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும். அது பீஷ்ம பிதாமகரின் ராஜ தர்மத்தை உணர்ந்திருக்க வேண்டும். தேவையற்ற தர்மத்துக்கான மகாபாரதத்தைத் தவிர்த்து சுதந்திர அரசிலமைப்புக்கு உத்தரவாதத்தை நல்க வேண்டும்.