ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான தமிழ் மொழி தேர்வு !

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான தமிழ் மொழி தேர்வு, செப்., 19ல் துவங்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழக அரசு துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, தமிழ் மொழி
தெரிந்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பதவிகளில் இருப்போர், வெளி மாநிலத்தவர் என்றாலும், அவர்களும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதன்படி, அவர்களுக்கான தமிழ் மொழி திறன் தேர்வு, செப்டம்பர், 19 முதல் அக்., 5 வரை நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அதிகாரிகள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...