*கல்வி மட்டுமே மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு*
வேலூர்,கல்வி மட்டுமே மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும் என்று, நாராயணி பீடத்தில் ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.கல்வி
உதவித்தொகைவேலூர் நாராயணி பீடத்தின் சார்பில் ‘வித்ய நேத்ரா’ திட்டத்தின்கீழ் ஆயிரம் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 கோடி அளவில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் மத்திய சமூகநீதித்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட், இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவை சக்தி அம்மா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.விழாவில் மத்திய மந்திரி தாவர்சந்த் கெலாட் பேசும்போது, “சமூகம், அரசியல், ஆன்மிகம் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதே எங்கள் துறையின் பணியாக இருக்கிறது. மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறோம். நரேந்திரமோடி பிரதமரான பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறோம். மனிதவளத்தை ஊக்குவிப்பதே எங்கள் நோக்கமாகும்” என்றார்.இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:-கல்வி மட்டுமே உயர்த்தும்எனக்கு தகுதி கல்வி மட்டுமே. மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்வது கல்வி மட்டுமே. இந்தியாவில் அதிக அளவில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது. கல்விபெறும் ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் உள்ளது. நாம் செய்யும் உதவி அடுத்த தலைமுறைக்கும் சென்று சேரவேண்டும். குறிக்கோளுடன் நடக்கும்போது தான் வாழ்க்கை வெற்றியாகும். இங்கிருந்து நிலவுக்கு செல்ல 6 நாட்களாகிறது. செவ்வாய் கிரகத்திற்கு செல்ல 9 மாதங்களாகிறது.நாம் சரியான நேரத்தில், சரியான திசையில் சென்றிருக்கிறோம். அதனால் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். நம்மால் இன்னும் சாதிக்க முடியும். நிலவில் தண்ணீர் இல்லை என்று அமெரிக்கா கூறியது.நிலவை முழுவதுமாக பார்த்து எந்தெந்த இடத்தில் தண்ணீர் இருக்கிறது என்று கூறினோம். அதன் பிறகே அமெரிக்கா விழித்துக்கொண்டது.நாங்கள் தாய்மொழியில் தான் படித்தோம். ஆனாலும் சந்திரயான், மங்கள்யானில் வெற்றிபெற்றோம். இன்றைய காலகட்டத்தில் அதிக வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது. அதை அடைய கல்வி அவசியம். மாணவர்கள் தங்களை புரிந்து கொள்வதோடு தங்களை சுற்றி இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.