ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி: இறுதி போட்டியில் நுழைந்தார் இந்தியாவின் பி.வி.சிந்து !

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் இறுதி போட்டிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.
பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர்
பேட்மிண்டன் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சிந்து கால்இறுதியில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் யுஹானை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார்.
இன்று இரவு நடைபெற்ற அரை இறுதியில் அவர் தர வரிசை பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ள ஜப்பானின் நோஜோமி ஒகுஹராவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 21-19, 21-10 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சிந்து இறுதி போட்டியில் நுழைந்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் பேட்மின்டனில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்று பெருமையை சிந்து பெற்றுள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியாவின் சாய்னா நேவால் வெண்கல பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...