ஆங்கிலேயளர்களிடம் 4 நூற்றாண்டுகள் அடிமையாகக் கிடந்து சுரண்டப்பட்ட நாம், இப்போதுதான் விடுதலை அடைந்திருக்கிறோம். இந்தியா விடுதலையடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டநிலையில், இத்தனை ஆண்டுகளில் நாம் சாதித்தது என்ன? என்பதை ஆராய்ந்து பார்த்தால், நாம் பெற்றதைவிட இழந்ததுதான் அதிகமாக இருக்கிறது.
அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நாம் முன்னேறியிருக்கிறோம் என்றாலும், பசியும் வறுமையும் இன்றளவுக்கும் ஒழிக்கப்படவில்லை என்பதே உண்மை. ஏற்கனவே ஆண்ட, தற்போது ஆளுகிற மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள், கோடீஸ்வரர்களை பெரும் கோடீஸ்வரர்களாகவும், ஏழைகளை பரம ஏழைகளாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறது. ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால் கல்வி, சுகாதாரம் ஆகிய சேவை இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஆனால், நமது நாட்டில், இவை இரண்டும்தான் சிறப்பான வியாபாரமாக மாறிக்கொண்டு வருகிறது என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை.
இந்நிலையில், 70ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும் நாளை தேசியக்கொடியை ஏற்றுகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா
சுதந்திர தின விழாவின் முதல் நிகழ்வாக, போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து, போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். அதன்பின்னர், அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதலமைச்சரை, தலைமைச் செயலாளர் அழைத்துச் செல்வார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொள்வார். அதன்பிறகு, 9.30 மணிக்கு சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள பிரமாண்டமான கொடிக் கம்பத்தில் மூவர்ண தேசியக்கொடியை முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்றுவார். அதைத் தொடர்ந்து, சுதந்திர தின உரையை முதலமைச்சர் நிகழ்த்துவார். அதில், சில அறிவிப்புகளை வெளியிடுவார்.
அதன்பின்னர், சிறப்பாகப் பணியாற்றி 14 காவல்துறை அதிகாரிகளுக்கு தங்கப் பதக்கங்களும் விருதும் வழங்குவார். தொடர்ந்து, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, மாற்றுத் திறனாளிகள் நலன் விருது, மகளிர் நலன் விருதுகள் மற்றும் அரசுத்துறை விருது உள்ளிட்ட பல விருதுகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்குவார்.
செங்கோட்டையில் பிரதமர்
சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றவுள்ளார். பிரதமர் கொடியேற்றும்போது, டில்லியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா குட்டி விமானம்மூலம் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்ற உள்ள செங்கோட்டையில் மட்டும் 9 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். டில்லி போலீசார், சிறப்பு பாதுகாப்புப் படை போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் தாக்குதலைத் தடுக்கும்வகையில் தரை, வான்வழி பாதுகாப்பு என, பல அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. முக்கிய கட்டடங்களில் குறிபார்த்துச் சுடும் வீரர்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. செங்கோட்டையின் சுற்றுவட்டாரப் பகுதியில் 500 கண்காணிப்பு கேமராக்கள்மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பின் ஒருபகுதியாக பாரா கிளைடிங் மற்றும் பலூன்கள் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வரை பறக்கவிட டெல்லி போலீசார் தடை விதித்துள்ளனர்.