திறப்பு விழா இழுத்தடிப்பில் பள்ளி கட்டிடம்: மரத்தடி வகுப்பறையால் மாணவர்கள் அவதி!

முனைவென்றி அரசு மேல்நிலை பள்ளி புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இழுத்தடிக்கப்படுவதால், வகுப்பறைகள் மரத்தடியில் நடைபெறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக திறக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள்,
பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், முனைவென்றியில் கடந்த 1971ம் ஆண்டு முதல் செயல்பட ஆரம்பித்த அரசு உயர்நிலை பள்ளி, கடந்த 2012ல் தமிழக அரசால் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக அறிவிப்போடு நின்ற இந்த பள்ளியில், மேல்நிலை பள்ளிக்கான வசதி செய்யப்படவில்லை. சுமார் 500 மாணவ, மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் கட்டமைப்பு வசதி இல்லாததால் மரத்தடி நிழலில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் நிலை உள்ளது.



இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கடந்த மூன்று மாதத்திற்கு முன் சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் இரண்டு ஆய்வகம் உள்பட எட்டு வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டி முடித்து மூன்று மாதங்களாகியும் இதுவரை பள்ளி கட்டிடத்தை திறக்க, அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் மாணவர்கள் மரத்தடி நிழலை நம்பியே உள்ளனர்.

பள்ளியில் கட்டப்பட்ட கட்டிடத்தை திறக்காமல், கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக மாணவர்களின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். விரைவில் மழைக்காலம் துவங்க உள்ளதால், உடனடியாக கட்டிடத்தை திறக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், 'முனைவென்றியில் மேல்நிலையில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை திறக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். மரத்தடி நிழலில் வகுப்பு நடைபெறுகிறது. இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். புதிய கட்டிடத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...