இந்தியாவுக்கு முதல் பதக்கம்; மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றார் சாக்ஷி மாலிக் !

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது



முன்னதாக காலிறுதியில் ரஷ்ய வீராங்கனை விளிரியா கொலாகோவா உடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்ததால் ரெபிசாஜ் சுற்றில் விளையாடிய சாக்ஷி மாலிக், அச்சுற்றில் மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ்ஜை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார். இந்தியா சார்பில் மல்யுத்த போட்டியில் பதக்கம் பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் சாக்ஷி.



மக்களை மதிக்கிறேன்:

தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த சாக்ஷி கூறியதாவது: என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்த நாட்டு மக்களை மதிக்கிறேன். அனைவருக்கும் இந்தருணத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



குவியும் வாழ்த்துக்கள்....



* மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல் மற்றும் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மக்கான் ஆகியோர் டூவிட்டரில் சாக்ஷிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.



*இந்திய வெளியுறவு துறை இணையமைச்சர் வி.கே.சிங்., தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



*கடந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் டூவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்



* மல்யுத்த வீரர் சுஷில்குமார் தனது வாழ்த்துக்களை டூவிட்டரில் தெரிவித்துள்ளார்.

*ஹரியான கவர்னர் கப்தான் டூவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரித்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...