துாய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் வகையில், நகர் பகுதிகளில், குப்பை போட்டால் அபராதம் விதிக்க திட்டமிட்டு உள்ளோம்,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
'துாய்மை இந்தியா திட்டத்தில் பொதுமக்களின் பங்கு' என்ற
தலைப்பில், டில்லியில், நேற்று நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற, மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான வெங்கையா நாயுடு பேசியதாவது: துாய்மை இந்தியா திட்டத்தில், மக்களின் பங்களிப்பு தற்போது, மக்களின் இயக்கமாக மாறி வருகிறது. ஆனாலும், முழுமையாக இது மாறவில்லை. மக்களின் மனப்போக்கில் ஓரளவுக்கு மாற்றம் தெரிகிறது. பிரதமர் மோடியின் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
எந்த ஒரு திட்டம் அல்லது இயக்கத்தையும் சிறப்பாக செயல்படுத்த, மூன்று கட்ட நடவடிக்கைகள் தேவை. முதலில், போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; இரண்டாவது, மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும்; மூன்றாவது, அபராதம் விதிப்பது.
அதன்படி, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில், அசுத்தம் செய்வோர், குப்பை போடுவோருக்கு அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.துாய்மை இந்தியா இயக்கத்திற்கு, மக்களின் ஆதரவை முழுமையாக பெறுவதற்கான வழிகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.