கை நீட்ட' சொல்லித் தந்த தாய் - பள்ளிக்கூட சிறுவன் சிறையில் !

கன்னியாகுமரி மாவட்டம் விராளிவிளையில், வீட்டில் திருடிய எட்டாம் வகுப்பு மாணவன், அவனது தாய் கைது செய்யப்பட்டனர். மார்த்தாண்டம் அருகே விராளிவிளையை சேர்ந்த தம்பதி ராஜாமணி, மேரிபுஷ்பம். இருவரும் பணிக்கு சென்று விட்டு, மாலையில் தான் வீடு திரும்புவர். சில நாட்களுக்கு முன் மாலையில், வீட்டின்
கதவு திறந்து கிடந்தது. அங்கு ௮ கிராம் நகை, ஐந்தாயிரம் ரூபாய் திருடு போயிருந்தது. அதே பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவனிடம் போலீசார் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசிய அவன், நகையை தனது தாயாரிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்தான். இதையடுத்து மாணவனும், தாயார் சுனிதாவும் கைது செய்யப்பட்டனர். மாணவன், நெல்லை சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...