கோவை அருகே, மாணவன் முதுகில் அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்தியதாக எழுந்த புகார் குறித்து, தாசில்தார் விசாரித்தார்.
கோவை மாவட்டம், அன்னுார் அருகே, கெம்பநாயக்கன்பாளையத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில்,
நான்காண்டுகளாக, 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. இந்நிலையில், ஏழாம் வகுப்பு மாணவன் பிரவீன் குமார் முதுகில் அமர்ந்து, தமிழாசிரியர் மாரப்பன் பாடம் நடத்தியதாக, மாணவனின் பெற்றோர், கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.
இதுகுறித்து விசாரிக்க, அன்னுார் தாசில்தாருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். தாசில்தார் மற்றும் வி.ஏ.ஓ., ஆகியோர், நேற்று, உதவி தலைமை ஆசிரியை கீதா, தமிழாசிரியர் மாரப்பன், மாணவனின் பெற்றோர் சந்தோஷ்குமார் - பரிமளா ஆகியோரிடம் விசாரித்தனர். தாசில்தார் இருதயராஜ் கூறுகையில், விசாரணை அறிக்கை, மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்படும், என்றார்.