அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.20) நடைபெறுகிறது.இதைத்தொடர்ந்து, மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் ஞாயிற்றுக்கிழமையும் (ஆக.21), பதவி உயர்வு கலந்தாய்வு திங்கள்கிழமையும் (ஆக.22) நடைபெற உள்ளது.
இந்தக் கலந்தாய்வு சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் செய்து வருகிறது.
தொடக்கக் கல்வித் துறை கலந்தாய்வு:
அதேபோல, தொடக்கக் கல்வித் துறை சார்பில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.இந்தக் கலந்தாய்வும் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சனிக்கிழமையும், இடைநிலை ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமையும் ஆன்லைன் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். காலை 9 மணிக்கே உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வுக்கு வர வேண்டும் என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.