*2 கட்ட தேர்வுகளின் கேள்வித்தாள்களில் பாரபட்சம் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு*
புதுடெல்லி, தேசிய மருத்துவ பொது நுழைவுத்தேர்வை சி.பி.எஸ்.இ. இரண்டு கட்டங்களாக நடத்தியது. முதல்கட்ட தேர்வு, மே 1–ந் தேதியும், இரண்டாம் கட்ட தேர்வு ஜூலை 24–ந் தேதியும் நடந்தன.
இவற்றின் முடிவுகள் கடந்த 16–ந் தேதி வெளியிடப்பட்டன. இந்நிலையில், இந்த தேர்வில் வெற்றி பெற்ற பீகார் மாநில இளம்பெண் சிவாங்கி சிங் என்பவர், இந்த தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தார்.நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்று, நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த மனுவையும் சேர்த்து, அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதிகள் சம்மதம் தெரிவித்தனர்.மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–முதல்கட்ட நுழைவுத்தேர்வு கேள்வித்தாள் எளிதாக இருந்தநிலையில், இரண்டாம் கட்ட தேர்வின் கேள்வித்தாள் கடினமாக இருந்தது. இந்த பாரபட்சத்தை போக்காமல், இரண்டு தேர்வுகளையும் ஒன்றாக கருதி, கூட்டாக முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இது சட்டவிரோதம். இதனால், முதல்கட்ட தேர்வு எழுதியவர்களே அதிகமாக வெற்றி பெற்றுள்ளனர்.எனவே, இந்த தேர்வு முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மதிப்பெண் சதவீத அடிப்படையில், அகில இந்திய ரேங்க் பட்டியலை தயாரிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.