சமூக வலைதளத்தை கலக்கும் அழகிய சிறுவன் !

*சமூக வலைதளத்தை கலக்கும் அழகிய சிறுவன் 3 வினாடிக்கு 100 பேர் பின்தொடர்கின்றன*

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பள்ளியில் படித்து வரும் சிறுவன் வில்லியம் பிராங்க்ளின் மில்லர்( வயது12) . இந்த் சிறுவனின்
 புகைபடத்தை ஜப்பானை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த புகைபடத்திற்கு பகிர்வுகள் வெள்ளம் போல அவரது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் குவிந்தன.

மேலும் அச்சிறுவனை இன்ஸ்டிராகிராமில் ஒவ்வொரு மூன்று வினாடிக்கும் 100 பேர் பின்தொடர்வதாகவும், தற்போது வரை 152,000 பேர் பின்பற்றிவருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுவனின் தாயார் வில்லிஸ் கூறியதாவது, சில பேர் போலியாக பின்பற்றுவதாகவும், மேலும் சிலர் இதை டேக் செய்து வருவதால், எந்த ஒரு கேள்வி என்றாலும் தனக்கு டுவிட் செய்யும் படியும், உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தான் கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த இரண்டு தினங்களில் சிறுவன்  சீனா மற்றும் ஜப்பானில் மிகவும் பிரபலமாகிவிட்டதாகவும் கூறினார்.

உலகின் மிக அழகான சிறுவன்  என அழைக்கபடுகிறான். மாடல் தொழிலில் ஈடுபட்டு உள்ளான்.பிராங்க்ளின் பல்வேறு தொலைக்காட்சி தொகுப்புகள் நடத்த வாய்ப்பு வருகிறதாம்.தற்போது கூட இன்ஸ்டாபேமஸ், தொலைக்காட்சி தொகுப்பாளர், ஸ்கைப் கேள்விகள் என பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதால், இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...